எங்கள் தமிழ் நாடே

எங்கள் தமிழ் நாடே...

ஆண்டிலே பத்தொன்பது நூறைக்கூட்டி
அத்துடன் அறுபத்தேழை வைத்து;
அடுக்காகப் படித்துப் பார்த்தால்
கிடைத்திடும் ஆண்டது, 1967ழே!
பார்த்திபனுக் கென்ன பைத்தியமா
பதறவேண்டாம்; பகர்வேன் கேளீர்,
நற்றமிழ் நாட்டை ஆள
நம்மவர் தொடங்கிய ஆண்டது!

தொடர்ந்தது நெடிய ஆட்சி
அடுத்தப் பத்தாண்டு களென்று
நாட்டினை உயர்த்திட யெண்ணி
தீட்டினர் திட்டங்கள் பலவே!
தேர்வினில் தோற்ற பிள்ளை
தேம்பியே அழுவது போல;
அடுத்து வந்த ஆட்சியினால்
அதிர்ச்சியில் உறைந் தனரே!

அவர்கள் பத்தாண்டு படுதோல்வி
இவர்கள் பத்தாண்டும் படுதோல்வி
முன்னவர் முத்தமிழ் அறிஞர்
பின்னவர் புரட்சித் தலைவர்
மீதமுள்ள நாட்க்களை யெல்லாம்
மிச்சமேதும் வைக்கா வண்ணம்
வேலிக்கு ஓணான் சாட்சிபோல்
வென்றனர் ஆளுக்குப் பாதியாய்!

ஒன்டக் குடிசை யில்லை
ஒத்தயடிப் பாதையு மில்லை
ஒட்டுப் போட்ட மக்களுக்கோ
போட்டனர் நாமம் நன்றாய்!
இவர்வந்தால் அவர் பொறுப்பு
அவர்வந்தால் இவர் பொறுப்பென்று;
அடித்தக் கொள்ளையைப் பார்த்து
அசந்தே போனோர் பலரே!

முப்பாட்டன் வழி வந்த
முப்போகம் விளைந்த நிலம்
முட்டாள் ஆட்சி யினால்,
முகவரியைத் தொலைத் ததுவே!
தாயைத் தொலைத்த பிள்ளை
தவியாய் தவிப்பது போல,
ஆறுகள் அழுதனவே பர்ப்பல
அரசு மணர்கொள் ளையாலே!

ஆட்டைக் கட்டினேன் ஒருவர்
மாட்டைக் கட்டினேன் மற்றவர்
சாமாநிய னுக்காக இவர்கள்
சாதித்த தென்ன வென்று,
சல்லடைக் கொண்டே நன்றாய்
சலித்தும் பார்த்து விட்டேன்;
அங்கொன்றும் இங்கொன் றுங்கூட
ஒன்றேனும் புலப்பட வில்லை!

காணி நிலம் தொலைகாட்சி
கணணி மற்றும் மிதிவண்டி,
ஆடுகள் கோழிகள் மின்விசிறி
ஆட்டுக்கல் அம்மி யென்று,
எழைகள் இருக்கும் வரைக்கும்
இலவசங்கள் தொடறு மென்றார்!
எழை யென்றால் யாரென்றேன்
எடுத்துரைக்க மறுத்து விட்டார்!

ஊருக்கொரு பள்ளிக் கூடம்
இருந்ததந்த காலம் போக
தெருக்கோர் மதுக் கடையை
திறந்தே வைக்க லானார்
நாட்டில் பலக் கலவரங்கள்
நடப்பது தெரிந் திரிந்தும்
நல்ல வருவாய் ஈட்டுவதால்,
நடக்கட்டும் கடை யென்றே!

இனியுமிந்த அவல நிலை
இப்படியேத் தொடரு மானால்
சிதறிக் கிடக்கு மெங்கள்
சிறியக் கட்சிக ளெல்லாம்
சீரிய சிந்தனை யோடு
சேர்ந்திட வேண்டு மொன்றாய்
எம்மக்கள் வாழ் வதற்கே
எதிர்காலம் தழைப் பதர்க்கே!

பார்த்திபன்.ப
03/04/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (17-Apr-15, 9:32 am)
பார்வை : 71

மேலே