நீங்களும் தொழிலாளி ……

உறக்கத்திற்கு இரையாகிய என்னை
அதிகாலை பத்து மணிக்கு எழுப்பும்
என் செல்ல ( கொலைகார ) கடிகாரமே……!

என் பற்களை தினமும் குளிப்பாட்டி
புத்தாடையுடுத்தி அழகுப் பார்க்கும்
என் இனிய பற்பசையே……!

கங்கையும் காவிரியும் கலப்பதோ கடலில் தான்
எப்படி என் வீட்டு குளியலறையில் நுழைந்தாய் என்று
என்னை தினமும் ஆச்சிரியப்படுத்தும் தண்ணீரே……!

எப்போதும் விசில் அடிக்கும் நடத்துனர்
வேகம் குறைப்பானைப் பயன்படுத்தாத ஓட்டுநர்
என்னை தினமும் தாமதமான நேரத்தில்
சரியாக ஏற்றிச் செல்லும்
என் புகைக்கக்கி பேருந்தே
நீங்களும் தொழிலாளியே ……!

எழுதியவர் : ராஜா (19-Apr-15, 2:17 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 81

மேலே