காதல் தோல்வி தேசம்

காலையும் மாலையும் மாறிடுமா?
காமத்தை காதல் வெறுத்திடுமா ?
காதலில் காமம் இல்லையென்றால்
காதல் தேசம் கணித்திடுமா?
என்னோடு பழகும் உன் காதல் – என்னை
விண்ணோடு முகிலாய் மாற்றுதடி
கண்ணோடு பேசும் உன் காதல் – என்னை
மண்ணோடு பூவாய் ஆக்குதடி
நாம் போகும் தூரம் வெகு தூரம் ஆனால்
மனசுக்குள் பாரம் இல்லையடி
நாம் வந்த பாதை இன்றோடு முடிந்தால்
உள்ளத்தின் குமுறல் தாங்கலடி
நீ சொன்ன வார்த்தை என் காதல் நெஞ்சை
வேரோடு அழிக்க பாக்குதடி
புரியாமல் பேசும் உன் காதல் வார்த்தை
உள்ளுக்குள் முள்ளாய் குத்துதடி.