கடற்கரைக் காதல்
உப்புக் காற்றிலும் உன் முகம்
உமிழ்கின்றது அழகினை..
கடற்கரை மணலிலும் மலர்கின்றது
மல்லிகை நீ அமரும் தருணங்களில்..
நடுக்கடலில் உள்ள மீன்களும்
தானாகவே வலைகளில் சிக்கி
கரை சேர்கின்றன உன்
வாசனை நுகர..
தயவு செய்து கடலுக்கு வெளியில்
சிரித்து விடாதே சிந்தும் அனைத்து
முத்துக்களையும் மூடி மறைக்கும்
சிப்பியாக நான் மாறுவது சற்று
சிரமம் தான்..
சிறு நொடியேனும் உன் சிறு பாதம்
அலைகளில் நனைத்துவிடு
ஆக்ரோஷமாக ஆடும் அலைகளும்
சற்று அமைதியாக அடிக்கட்டும்..
என்னைப் பிரியாக் காதலியே
இக்கடல் மண்ணைப் பிரியும் பொழுது சில முத்தங்களை காற்றில் வீசி விடு இல்லையெனில் கடல் அழுது விடும் சுனாமியாக..
"கடற்கரைக் காதலுடன்"...
செ.மணி