தூய்மைப்படுத்துவதற்கு ஆயத்தமாகுமுன்

ஒட்டடைக்குச்சியால்
உங்கள் தலையில் படிந்துள்ள
பூச்சிக்கூடுகளைத் துடைத்தெறியுங்கள்

துடைப்பத்தால் பெருக்கி
மனசின் குப்பைகளை
வெளியே தள்ளுங்கள்

ரத்த வாடை போகும்வரை
கைகளை நன்றாகக்
கழுவிக்கொள்ளுங்கள்

ரத்தக்கறை படிந்த ஆடைகளை
சவக்காரத்தில் ஊறவைத்துவிட்டு
ஒருபொழுதாவது அம்மணமாய் நில்லுங்கள்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (21-Apr-15, 1:47 pm)
பார்வை : 178

மேலே