சின்ன சின்ன தேடல்கள்
என்னை விட
அதிகமாக
என் காதலே
காதலிக்கிறதடி
உன்னை....
-------------------------------------------------
சிரிக்க வேண்டாம்
முறைத்து
விட்டாவதுப் போ..
பூத்துவிட்டுப்
போகட்டும் ரோஜா
-------------------------------------------------
ஓய்ந்துப் போகிறேன்
உன்னை
விரல்களில்
தேடித்தேடி...
-------------------------------------------------
உனக்குள்
என்னைப் புதைத்து
உறங்கிடும் நாள்
எந்நாளோ?