காமப்பேய்
![](https://eluthu.com/images/loading.gif)
..""" காமப்பேய் ""...
உடல் பசி எடுத்துவிட்டால்
உறவுகளும் அறியாது
பச்சிளம் உயிரும் அறியாது
மனைவி மகளென தெரியாதே
இரத்த சதைக்கு ஆசைப்பட்டு,,,
பாமரனைவிடவும் படித்தவனே
தன்னுடல் இச்சைக்கு இணங்கி
காமத்தின் உச்சம் போவதால்
கல்விக்கூடங்களும் இங்கே
கலவிக்கூடங்களாய் மாறுது
காமத்தின் பேயினை ஒழித்திட
தலை துண்டிக்க படவேண்டும்
தண்டனை அதிகமென்றே நீ
நினைத்துவிட்டால் குறைந்தது
பிறபுறுப்பையாவது துண்டித்திடு
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..