கைப்பாவைகள்

கைப் பாவைகளாய் வாழ்வதும்,
கையாலாகாத பாவைகளாய் வாழ்வதும்
கை மீறிய விஷயம் தானோ...?
கையாலாகாத தனத்தை
கையொழித்து
கை மேல் கை கோர்த்து நம்பிக்
கை கோர்த்து தேர்ந்த
கைகள் இணைந்து செய்யும்
காரியங்கள் எதுவும்
கை சேர்க்கும் வெற்றிக் கனியை!
கைப் பாவையாய் வாழாதே!
நம்பிக்கை பாவையாய் நிலைத்திடு!