வெளியில் தெரியும் வெற்றியின் கீழே

வெற்றி..
வெளியில் தெரிவது..
அதன் கீழே இருப்பது..
கடின உழைப்பு ..அபாயங்கள்
அயரா முயற்சி ..போராட்டங்கள்
சகிப்புத்தன்மை..தோல்விகள்
செயலில் திறமை ..புரிதல்கள்..
மனோ தைரியம்..மாற்றங்கள்
ஐயங்கள்..தெளிதல்கள்
ஒழுங்கு..ஒப்புரவுகள்
விமர்சனங்கள்..திருத்தங்கள்
நிராகரிப்புகள் ..விரக்திகள்
தியாகங்கள்..தீர்மானங்கள்..
உதிர்த்தல்கள்..உறுதிகள் ..
உதாசீனங்கள்..அவமதிப்புகள் ..
எரிச்சல்கள்..ஏளனப் பேச்சுகள் ..
இவையும் ..இன்னமும் கூட
மறைந்தே இருக்கின்றன..
வெளியில்..தெரிவதென்னவோ
வெற்றி..மட்டுமே..
இது புரிந்தால்
வெற்றி எவர்க்குமே !

(முகநூலில் மேற்கண்ட படம் பார்த்ததும் அதை தழுவி எழுதிய வரிகள் ....எனது )

எழுதியவர் : கருணா (24-Apr-15, 8:33 pm)
பார்வை : 548

மேலே