சமர்ப்பணம்

என்னை பயிற்றுவித்த
மருந்தாளுனர்
திருமதி சுசீலா அவர்களுக்காய்
எந்தன் எழுதுகோலின்
முதல் வரிகள் !

*~~~~~----~~~~~~~*

சுறுசுறுப்பாய் இருப்பது எப்படி என
ஈ, எறும்புகள் கூட
தங்களிடம் தான்
கற்று கொண்டதோ !

அன்னை உங்கள் முகமலர்ச்சியில்
ஆயிரம் அர்த்தங்கள் காண்கிறேன் !

கவி பாடும் திறனில்
என் நிலை மறந்து ரசிக்கிறேன் !

காண கிடைக்காத பாக்கியம்
கிடைத்து விட்டதை போல்
உணர்கிறேன் !

காற்றுள்ள போதே தூற்றி கொள்
என்பதற்கேற்ப தங்களிடம்
பயிலும் போதே கற்று கொண்டேன்
வாழ்க்கையில் மகிழ்ச்சியின்
ரகசியத்தை !

வாழ்கை வாழ்வதற்கே
சாவதற்கு அல்ல
சாதிப்பதற்கே
என்று உணர வைத்த அன்னையே !

அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு
எனும் நாற்குனங்களின்
அரும்புதல்வியே !

தவம் இருப்பேன் !
முயற்சியும் செய்வேன் !
அடுத்த பிறவியிலாவது தங்கள்
மகனாய் பிறப்பதற்காக!

உங்கள் மாணவன்
தங்கதுரை

எழுதியவர் : உங்கள் தோழன் தங்கதுரை (24-Apr-15, 3:15 pm)
சேர்த்தது : தங்கதுரை
Tanglish : samarppanam
பார்வை : 447

மேலே