ஆத்மாவின் பரிதாபக் குழலோசை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
வெண்ணிற துணியிடை
தேகத்தை இறுகக்கட்டி
ஆறடிக் கல்லறைக்குள்
மண் கூறுகள் சாப்பிட
உதிரமில்லாத இதயத்தின்
புலம்பல் கேட்கிறதா?
உயிரில்லாத ஆத்மாவுக்கு
தாய் மீது பாசமும்,மடிமேல்
துயிலும் குழந்தைக்கு பாடும்
தாலாட்டும் நினைவுக்கு வருகிறது.
உலகத்தில் நிம்மதிக்கு
மருந்து மரணம் என்றிருந்தேன்
மரணமும் பாசமான நெஞ்சத்தை
ஜடமாக்க முடியாது.
நல் ஒளியில் ஜனங்களோடு
போராட முடியாத ஆத்மா
இருளோடு போராடுகிறது.
சாலையில் தீராத புலம்பலோடு
நான் வாழ்ந்த இடத்திற்கு செல்ல
என்னை அஞ்சி என் உதிரத்தால்
பிறந்தவர்களும் உணர்வுகளால்
கலந்த மனைவியும் எங்கேயோ சென்றிருப்பேர்.
உயிரற்ற ஆத்மாவுக்கு
உள்ளமில்லை என்று
எவர் சொன்னது நேசத்தை
பெறமுடியாத ஏக்கம்
தூரத்தில் ஒலிக்கும் கூவிசை!
கேட்கிறதோ குழலோசை....!!!