விழி திருட்டு
ஏதோ ஒரு கணத்தில்
எதிர்பாராமல் நடந்தது
விபத்து.
ஆம் எதிர்பாராமல்
நடப்பதுதானே விபத்து.
ஒரு முறை மோதியதில்
உன் விழி என்னை
திருடி கொண்டதே.
என்னை மீட்டு கொடுக்க
யார் மீது தொடுப்பது
வழக்கு.
களவாடிய கண்கள் மீதா?
அதை கொண்டிருக்கும் உன் மீதா ?
வழக்காடிய பின்
வழங்கப்பட்டது தீர்ப்பு.
மீண்டும் ஒரு முறை
பார்க்க சொல்லி
திருடிய கண்களை.