இயற்கையாகவே இப்படித்தான்

ஓரிடத்திலே ..உச்சிவெயில்..
இன்னோரிடத்திலே.. இளம் காலை..
இப்படியே .. அந்தி மாலை ..
நள்ளிரவு...

..
இங்கே அக்கினி கோடை..
அங்கே கடும் குளிர் காலம்..
இங்கே இலையுதிர் காலம்..
அங்கே பெரு மழைக் காலம்..
...

இயற்கையே இப்படி
மாறி மாறி
இருப்பதால்..
..
எனக்குப் பிடித்தது..
உனக்குப் பிடிக்காமலும்..
உனக்கு இனிப்பது
எனக்கு கசப்பாகவும்
அப்படி அப்படியே
இருந்து விட்டுத்தான்
போவோமே..
இயற்கை போலே !
..
அதுவன்றி
எல்லோரும் ..
எல்லாமும்..
ஒன்றேபோல்
இருக்கச் சொல்லி
இழுப்பதற்கோ .. கால்கள்..
அறுப்பதற்கோ.. சிரங்கள்..
இல்லை..
அழிவதற்கோ.. மனிதன்?

எழுதியவர் : கருணா (27-Apr-15, 4:31 pm)
பார்வை : 82

மேலே