என்னத்தை சொல்வது

என்னடா ..
வீட்டுப்பாடம்
எழுதி வரவில்லையோ..
என்ற வாத்தியாரை..
அச்சமுடன் பார்க்கையில்
ஏளனச் சிரிப்புகள்..
வகுப்பு முழுவதும்
..

கையில் இரண்டு..
பின்னால் ஒன்று ..
பிரம்படிகள் வாங்கிக்கொண்டு
இடத்தில் வந்து
அமர்ந்தபோது..
அவனுக்கு ..
வந்த மனப்பான்மை..
பின்னாளில்
..
எந்தக் காரியத்தை ..
எவர் ஒருவரும் ..
சரியாக..
நிறைவாக..
அழகாக..
செய்தாலும்..
..
எரிச்சலாய்
வருகிறது..
பொறாமையாய்
இருக்கிறது..
கோபம் கோபமாய்
வருகிறது..

..
என்கின்றான்..
என்னத்தை சொல்வது?
..

எழுதியவர் : கருணா (27-Apr-15, 4:05 pm)
பார்வை : 767

மேலே