வினா
விடை அறியா கேள்வி தேடல்
வினாவை நோக்கி விடையின் மோதல்
எய்தவன் அறிவான் எய்யுமிடம்
கணைகள் அறியா புகுமிடம்
வெற்றி தோல்வி தெரியாது
சரியா தவறா புரியாது
வாழ்வும் சாவும் அறியாது
நாவும் ஆடும் புது கூத்து
விடை அறியா விளையாட்டு
விதி அறியும் எது கூற்று
மனம் வெல்லும் போராட்டம்
சினம் கானல் நீரோட்டம்
பூபாலம் நிலை அல்ல
பூவே நீ நிழல் அல்ல
சரி என்று நினைத்தேன் சரியன்று
தவறென்று உரைத்தாய் தவறன்று
பிரிதல் எல்லை இப்போது
புரிதல் உண்டு எப்போதும்

