சிந்தனை அந்தாதி
 
 
            	    
                சிந்தனை அந்தாதி 
நினைவுகள் உள்ள மனிதா 
நிலை இல்லா உலகில் நீ 
நிறைவேறா கனவு காண்பது 
உன் எதிர் காலத்திர்கினிதா 
இனியவை கண்ணுக்கு தெரிந்தும் 
காணாத உன்னிரு கண்களை 
மண்ணுக்கு இரையாக்கு இல்லையானால் 
நல்ல குருடனுக்கு திரையாக்கு 
திரையரங்கில் நல்ல திரைபோல 
தெளிவாய் காட்டிடு உன்மனதை 
அதுவே தெளிந்த நன்நீரைபோல
தெளிவாய் காட்டிடும் உன்செயலை
செயலை காட்டு புயலைபோல
தன் மனதைக்காட்டு பகலைப்போல
அன்பினுருவமாய் நீ யிருந்தால் 
நாங்களும் திகழ்வோமுன் நிழலாய்.
                                                                   சிவா ராஜலிங்கம்
 
                     
	    
                
