உபயோகமில்லாதது

ஒரு மரம்..
அதன் கிளைகள் கூட
சிறிதுதான்..
தங்கி நிழல் பெறக் கூட
அதன் அடியில்.. யாரும்
நிற்பதில்லை ..
அருகில் பல மரங்கள்
அவற்றின் கீழ் மட்டும்
எல்லோரும் ..என்று
வருத்தப்பட்டு..
அழுது..
அழுது..
சரியாகக் காய்ப்பதைக் கூட
நிறுத்திக் கொண்டது
அந்த மரம்..
ஒரு நாள்..
துறவியொருவர்..
அதன் கீழ் வந்து
அமர்ந்திட..
குளிர்ந்தது..
மரம்..
மரத்தின்
மனம் உணர்ந்த துறவி..
அசுத்தக் காற்றை வாங்கி
உயிர்க் காற்று தரும் மரமே..
இப்படியே இரு..
என்று சொல்லிப் போக..
இன்னும் குளிர்ந்தது மரம்..
நீண்டன கிளைகள்..
பிறந்தன புது இலைகள்..
பறந்து விரிந்தன
அதன் எல்லைகள் ..
உபயோகமில்லை என்று எதுவுமில்லை..
விதமறிந்து உபயோகிப்பார் யாருமில்லை
என்றறிந்து ..முன்னேற
முடவனுக்கும் தேன் கிடைக்கும்..
முறை அறிந்து முயற்சித்தால்..
அது வரை..
உதாசீனங்கள்..நிராகரிப்புகள்..
இவற்றை காதுகள்
கேளாதிருக்கட்டும்!