அறிவியல் என்பது

சடத்துவத் திருப்பம் என்பார்
சார்புறு இயக்கம் என்பார்
படைத்தல் என்றெதுவுமில்லா
பாரிய வெடிப்பு என்பார்.
உடைத்திடத் தோன்றும் தூசின்
உள்ளீட்டுத் துகள்கள் சேர்ந்து
படிப்படியாக அண்டம்
பரிணமித்தது என்று சொல்வார்.
படைத்தலில் உறைந்த சக்தி
உடைத்தலில் உயர்ந்து நிற்கும்
தடுத்திட முடியாச் சேதம்
தன் நிலை உரைத்து நிற்கும்
வட கடல் நீண்டு செல்ல
பெருங்கடல் குறுகிச் செல்ல
வளர்ந்திட ஆல்ப்ஸ் மலையும்
விலகிடும் ஆபிரிக்கா.
இமயத்தின் சிகரம் ஓங்கி
இயமனாய் நசுக்கிக் கொள்ள
இடயுறாப் பாரம் பற்றி
இப் புவிதட்டுக்கள் முட்டி கொள்ளும்
தட்டுக்கள் முட்டிக் கொள்ள
தட்டுக்கீழ் நுழைவு தோன்றி
எட்டட்டும் இடைநுழைவால்
ஏற்படும் பூகம்பங்கள்.
இயற்கையின் மாற்றம்என்றும்
எவர்கையில் இருப்பதில்லை
தடுத்திட முடியா சக்தி
தரணியை ஆட்டிச் செல்லும்.
படைத்தவன் அவனை நம்பார்
படியளப்பவர் நாமே என்பார் -கண்
நொடித்தலில் நிகழும் மாற்றம்
நோக்கிடத் திறனிலாதோர்.
கிடைத்திடும் அறிவை வைத்து- உலகை
காத்திடும் திறன் தவிர்த்து
கியூரியோசிற்றி பற்றி
கிண்டுவார் செவ்வாய்க் கோளை...