எழுந்து வா தோழா
விதியை மாற்றலாம் தோழா
உனக்குள் துணிவது இருந்தால்
மதியினை வெல்லலாம் தோழா
உனக்குள் மனமது இருந்தால்
அன்பினை ஆளலாம் தோழா
உனக்குள் நற்குணமது இருந்தால்
நிலவிலும் வாழலாம் தோழா
உனக்குள் தைரியம் இருந்தால்
நிச்சயம் அடையளாம் தோழா
உனக்குள் லட்சியம் இருந்தால்
காலத்தின் வேகத்தை கணிக்கலாம் தோழா
உனக்குள் உத்வேகம் இருந்தால்
கனவுகள் இருந்தால் போதும் தோழா
நிஜமாக்கலாம் ஓர்நாள் நீ வா வா.....................................