உண்மை கதை

"அம்மா ஒரு வெள்ளி வேணும் "
அடம் பிடித்து வாங்கிச்சென்றால் ஒரு சிறுமி
தாமானில் இரவுச் சந்தை
பிடித்ததை வாங்கி சாப்பிடலாம்..
நடக்க போகும் விபரீதம் தெரியாமல்
சந்தோஷமாக சென்றால் ....

சந்தை சென்றக் குழந்தை வீடு திரும்பவில்லை
வீட்டிலிருந்த அனைவரும் சிறுமியை தேடியும் கிடைக்கவில்லை
இரண்டு நாட்கள் சென்று ,
ஒரு பிளாஸ்டிக் பையில் ,
உயிரற்ற அச்சிறுமியின் உடல் கிடைத்தது

பெற்றோர்கள் இது தன்மகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு
முகம் சிதைக்கப்பட்டிருந்தது
பல முறை கற்பழித்தபின்
எட்டு வயதே ஆன சிறுமியின்
மர்ம உறுப்பில் கத்தரிக்காய் திணிக்கப் பட்டிருந்தது

ஏழு எட்டு மிருங்கங்களால் சீரழித்தப்பின்பு சிதைக்கப்பட்டிருக்கிறாள்..
அச்சிறுமியின் பெற்றோரின் மேல் உள்ள முன்பகையினால்
கற்பழித்து கொலை செய்ததாய் வாக்குமூலம் பதிவானது ...

மனித மிருகங்கள் மனிதனையே வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றனர்,
மனித மாமிசத்திற்கு அலையும் பிணம்தின்னி கழுகுகள்

எழுதியவர் : Rubini .Murugiah (5-May-15, 11:04 am)
Tanglish : unmai kathai
பார்வை : 157

சிறந்த கவிதைகள்

மேலே