தலையணை

தாய் ....
தலையணையும் ஒரு தாய் தான் ...
எத்தனை இரவுகள் கண்ணீர் வடித்திருப்பேன்
அவளுக்கு மட்டுமே தெரியும் ...
நான் தூங்கத்
தான் தூங்காமல்
நெஞ்சை இளவம் பஞ்சாக்கித் தந்தவள் ....
ஆனந்தத்தில் அணைக்கும் அன்னையாய்
சோகத்தில் கண்ணீர் துடைக்கும் தோழனாய் ..
.
.
.
.
எனக்கு இனி ஓர் ஜென்மம் இருப்பின் உனக்கே மகனாய் பிறக்க வேண்டும் ....
~தமிழ்நேசன்