விழித்தெழு இனமே - கற்குவேல் பா

இனத்துடன் இருந்தால் இறப்பேன் என்றே ,
என்னை அயல்தேசம் அனுப்பினாயோ ..
உன் குருதியில் நுழையும் தோட்டாக்கள் ,
பறிக்கிறதே என் உயிரினை ..
கற்பிழந்த என் தோழியின் கூக்குரல் ,
அழைக்கிறதே இறப்பினை ..
பெற்றோரிழந்த மழலையின் அழுகுரல் ,
சிதைக்கிறதே என் செவிப்பறையினை ..
உடல்களை குவித்தே கோட்டைகட்டி ,
சிம்மாசனமிடும் முயற்சியோ ..
வேடிக்கை பார்க்கும் உலகநாடுகளும் ,
வேண்டுவதும் இதைத்தானோ ..
புத்தன் பிறந்த மண்ணில்தானே - இந்த
பித்தர்களும் பிறந்தார்கள் ..
சத்தியம் வெல்லுமென்ற கூற்றெல்லாம் ,
சாத்தியமாகாமல் போனதே ..
நரம்புகள் அறுபட்ட இசைக் கருவியாய் ,
இனத்தை இழந்தே நானும் ..
விழித்தெழு இனமே மீண்டுமொருமுறை ,
விதைக்கனும் நமதே ..!!!
-- கற்குவேல் . பா --