புரட்சிக் கவிஞர் பிறந்த தினம்-ரகு
மீண்டும் பிறப்பாயா எந்தமிழா
மீளச் செய்வாயா எந்தமிழை-உம்
வார்த்தை வாள்களற்றுப் போனதாலோ
குண்டுகள் தெறிக்கிறது எம்மினத்தில்
ஆண்டு அளவளாவிய எம்மொழியோ
ஆங்கிலக் கம்பிகளுள் விம்முகிறது
அதர்வண மேவியத் தமிழினமோ
ஐயகோ தன்னையே அழிக்கிறது
சொற்களால் எத்துணைச் சுடர்தெளித்தாய்
சொற்களால் எத்துணைச் சுகம்படைத்தாய்
வீரமும் துணிவும் வேர்விடட்டும்
என்றன்றோ வீரியக் கவி புலர்ந்தாய்
பாழ்படும் சமுதாயம் மறந்துன்றன்
போர்வாள்க் கவிகளைப் பரண் இட்டதே !