அம்மா

கவிஞன் ஆம் நான்
இன்னும் எனக்குத் தெரியவில்லை
வரிகள் அடுக்கி
வார்த்தைகள் தொடுத்து
ஒரு பக்கத்து வெள்ளைத்தாளில் அடைக்க!
அடைக்க முடியுமா உன்னை?
இலக்கியத்தில் இல்லாதவளை
காவியத்தில் காணாதவளை
கற்பனைக்கு எட்டாதவளை
என் கண்ணருகில் நீ இருந்தும்
கவி வடிக்கத் தெரியவில்லை..
உருவகம் ஒன்று உனக்கு இல்லையடி..
உலகையே ஒரு முறை திரும்பி பார்த்தேன்
உன்னை கொண்டு உருவகமாக்க ஆயிரம் உண்டு- ஆனால்
உருவகம் என்று உனக்கு ஒன்று இல்லை..............