மீன்தொட்டி

அந்த மீன்கள்
இங்கும் அங்கும்
நீந்தின
கண்ணாடியில் போய்
முட்டிக்கொண்டன
அந்த மீன்கள்
மறுபடியும்
இங்கும் அங்கும்
நீந்தின
மறுபடியும்
கண்ணாடியில் போய்
முட்டிக்கொண்டன
அந்த மீன்கள்
மறுபடியும்
மறுபடியும்
இங்கும் அங்கும்
நீந்தின
மறுபடியும்
மறுபடியும்
கண்ணாடியில் போய்
முட்டிக்கொண்டன
இரண்டு
நிமிடங்களுக்கு மேல்
ரசிக்கமுடியவில்லை
என்னால்
மீன்தொட்டியை

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (30-Apr-15, 11:16 am)
Tanglish : meenthotti
பார்வை : 938

மேலே