எதையோ ஞாபகப்படுத்தும் ஜோக்ஸ்
1
நீதி மன்றத்தில் சங்கிலித் திருடன் சடையாண்டி: எசமான், என்னோட வழக்குலேயும் அரசு வக்கீல் தரப்பு வாதம் செல்லாதுன்னு உத்தரவு போடுங்களேன்?
....................................................................................................................................................................................
2
நீதிபதி: கோவில் சொத்துக்களை கொள்ளையடிச்சீங்களா?
கொள்ளைக்காரர்: அதுக்குத்தான் வருமான வரி கட்டி ரசீது வாங்கி வச்சிருக்கேனே?
................................................................................................................................................................................................
3.
அதிகாரி அமைச்சரிடம்: பள்ளிக்கூடத்துல காலியாய் இருக்கிற டீச்சர் வேலைக்கு சத்துணவுல முட்டை வேக வச்சுப் போடுற ஆயாவை எல்லாம் அப்பாயிண்ட் பண்ண முடியாதுன்னா கேளுங்க சார்... !
................................................................................................................................................................................................
4
நீதிபதி : எதுக்காக நீ தெருவுல முதல்ல இருக்கிற வீடுங்களை குறி வச்சித் திருடுன?
திருடன்: முதல்ல வர்றவங்களுக்கு முன்னுரிமை கொடுத்தேன் எசமான்.. !
...............................................................................................................................................................................................
5
அமைச்சர்: முத்து மாரியம்மன் கோயிலுக்குப் போய் பாலாபிஷேகம் பண்றது மட்டும்தான் புரோகிராம். நீ என்னடான்னா நாட்டுல பிரசினைன்னு ஆரம்பிக்கிறியே?
காரியதரிசி: சார், பிரசினையே முத்து மாரியம்மன் கோயில் சிலை காணோம்கிறதுதான்.. !
................................................................................................................................................................................................
6
எஞ்சினியர் நண்பரிடம்: நாளைக்கு எந்த இடம் எப்படி மாறுமோ யார் கண்டது? அதான்... மின்மயானம் வைக்கும்போதே ஒரு லைப்ரரி, ஆபரேஷன் தியேட்டர், நீச்சல் குளம் , மீட்டிங் ஹால், ரன்-வே, ஜிம், கிச்சன் எல்லாம் கட்டிட்டேன்.....!
....................................................................................................................................................................................