திசை மாறிய புலன்கள்...காதலால்..
உன்னை பார்த்ததும் விழிகள்
சுவாசிக்க தொடங்கின..
கண் இமைக்கும் ஒவ்வொரு
நொடியும் மூச்சுத்திணறும்..
என் மீசை புருவத்தை
முறுக்கும் போது
உன் அழகை வாய் முழித்துப் பார்க்கும்..
எச்சில்கூட வேர்வை போல் கொட்டும்..
உன் பிரிவில் நாக்கு நரைத்து விடும்
பற்கள் தாடி வளர்க்கும்..
நீ சிரிக்கும் தருணத்தில்
இதயம் நரம்புகளை தன் வசமாகும்
நீ தலை வருடும் போது
மூளை “லப்-டப்” என துடிக்கும்..