காதல் என்னும் போதைதி மரம் - வைரா சிறு கதை
காதல் ....
எவ்வளவு ரம்மியமான வார்த்தை
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேர் இருக்கும்
காதல் அது காதல் என்று அந்த அறியா பருவத்தில் பாடி திரிந்திருகோம்
அப்படி என்ன காதல் ...
சுருக்கமா சொன்னா ...
"பக்கத்து வீட்டுல எளவு விழுந்தது பெரிசா தெரியல ,ஆனா நம்ம ஆளு இன்னைக்கு இந்த பக்கம் வர மாட்டாங்கிறது பெரிசா தெரியுது"
அதுதாங்க காதல்
"கும்பகோனத்தில குழந்தைகள் கருகி சாவு"
"குஜராத் பூகம்பத்தில் லட்ச கணக்கில் உயிர் சேதம்"
"கார்கில் போரில் எண்ணற்றோர் பலி"
"இன்று உன் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் "
இதில் எது துயரமான செய்தி என்றால்
கடைசிதான் என்பான் காதலிப்பவன்
காதல் அத்தனை சுயநலம் வாய்ந்தது.நானும் சுயநலவாதி ஆக வேண்டிய தருணம் வந்தது .
ஆம் .. கல்லூரி முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம் .மீசையுடன் ஆசையும் முளைக்கும் பருவம் அது . தினந்தோறும் அதிகாலையில் பால் வாங்க செல்ல என் வீட்டு வழியாக செல்வாள் .நான் அந்த சமயம் பல் துலக்கி கொண்டிருப்பேன். சில சமயம் அவள் வர தாமதமானால் அது வரை பல் துலக்கி கொண்டிருப்பேன் .இன்றைக்கு கூட ஏதாவது விளம்பரதில் உங்கள் பற்களின் வெண்மைக்கு காரணம் என்று வந்தால் எனக்கு அவள் ஞாபகம்தான் வரும்.
ஒரு ஓர பார்வை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு போவாள் எனக்கு அப்படியே நெஞ்சில் மின்னல் வெட்டியதை போல் இருக்கும் .
அந்த நேரத்துல கவிதை என்கிற பேர்ல கண்ணா பின்னானு எழுதி நண்பர்கள் என்னை கண்டால் ஓட ஒழிய வைத்திருக்கிறேன்.அதில் சில உதாரனக்கவிதைகள்
"சில்லரையாக சிரித்து போய் விட்டாய்
சிதறிகிடப்பவன் நானல்லவா இங்கு !
அடை மழையில் இடி மின்னல் வந்தால் உள்ளே போய் விடும் நான்
என் இதயத்தில் மின்னல் வெட்ட காத்து கொண்டிருக்கிறேன் வெளியே..
இப்படி எல்லாம் எழுதி அவளிடமும் காண்பித்திருகேன். நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கா .ஒரு வேல என் மனசு புண் பட கூடாதுன்னு கூட பொய் சொல்லி இருக்கலாம் ஞாயிற்று கிழமைகளில் குடி தண்ணி குளத்திற்கு தண்ணி எடுக்க போவோம் ஆளுக்கு ஒரு சைக்களில் குடத்த கட்டிக்கிட்டு .அது ஊர் எல்லைக்கு வெளியே உள்ள குளம். யாரவது வரும் வரை பேசி கொண்டிருப்போம் ,யாராவது வந்து விட்டால் தண்ணி எடுப்போது போல் எடுப்போம் . அவர்கள் போய் விட்டால் தண்ணியை கீழே வாரிக்குள் ஊத்தி விடுவோம் .மறு படியும் யாராவது வந்தால் அதே போல் எடுப்பது போல் எடுத்து கீழே ஊத்தி விடுவோம்.இப்படி நாங்க எடுத்து ஊத்தின தண்ணிய சரியா வயலுக்கு பாய்ச்சி இருந்தா முப்போகம் விளைஞ்சிருக்கும் .
ரெம்ப சமயம் ஆயிட்டா பிரிய மனசில்லாம சைக்கிள தள்ளிகிட்டே மெதுவா போவோம் .மெதுவான்ன 70,80 வயசு கிழவி கூட எங்கள தள்ளிக்க சொல்லிட்டு போகும் அவ்வளவு மெதுவா போவோம் .கல்லூரி வரை நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது .திடீரென்று ஒருநாள் அவள் சொன்ன செய்தி எனக்கு மின்சாரம் தாக்கியதைப் போல் இருந்தது
"என்னை பொண்ணு பார்த்துட்டு போய்ட்டாங்க "
நீ என்ன சொன்னே ?
என்னால எங்க அப்பா அம்மா பேச்சை தட்ட முடியாது . திரும்பி பதில் பேச வாயில வார்த்தை வர மறுக்க
"எங்கே இருந்தாலும் நல்லா இருன்னு " குரல் தழு தலுக்க, அவ மூஞ்சிய கூட பார்க்க பிடிக்காம திரும்பி நடக்க ஆரம்பித்தேன் .எனக்கு வேதனையாக இருந்தது என் கையாலாதனம் நினைத்து. கில்லி விஜய் மாதிரி எல்லாரையும் அடிச்சு போட்டு அவள கூட்டி கிட்டு போற அளவுக்கு எனக்கு மெட்சுருட்டியான வயசு இல்ல. எனக்குன்னு நிறைய கடமைகள் என் கண் முன்னே வந்து நின்றன . நல்லா வேலைல சேரனும் .செமஸ்டர் பீஸ்காக அம்மா அடகு வச்ச தாலிய மீட்டு கொடுக்கணும். அப்பா ரெம்ப நாளா கண் ஆபரேசன் பண்ணணும்முசொல்லிக்கிட்டு இருக்காரு .தம்பிய ஊரே பாராட்டுது ஸ்கூல் பர்சிட்டுன்னு சொல்லி,அவன நல்லா படிக்க வைக்கணும் . இத்தனையும் முடிக்க இன்னும் 5,6 வருசமாவது ஆகும் .
ஒன்னும் மட்டும் முடிவு பண்ணிட்டேன்
17,18 வயசு பொம்பள புள்ளைங்க காதலிக்கிற வயசு
23,24 வயசுதான் ஆம்பள பசங்க காதலிக்கிற வயசு ...
இந்த திருமணதிற்கு
ஆணின் வயது 21
பெண்ணின் வயது 18
என்பது போல காதலிப்பதிர்க்கும் சட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்குமுன்னு
இன்னைக்கு வரைக்கும் புலம்பி கொண்டிருக்கிறேன் ....
- வைரா