என்று தணியுமிவர் வாழ்வின் சோகம்

என்று தணியுமிவர் வாழ்வின் சோகம்??

உழைச்சி களைச்சி
நெல்லு செஞ்சோம்..
ஒருவேள கஞ்சிக்கே
எசமான் ஆனோம்....

உழைச்சி நெய்ஞ்சு
துணிகள் செஞ்சோம்..
ஒருசின்ன துணிக்கே
அருகத ஆனோம்....

உழைச்சி மலைச்சி
கட்டிடம் செஞ்சோம்..
ஒழுகுற குடிசைக்கே
உறவா ஆனோம்....

அரவயிறு சோறு..
அரகொற ஆடை..
அம்போனு குடிசை..
இதுதானா வாழ்க்கை....

நாங்க தாங்க உழைப்பாளி
கஷ்டப்படும் தொழிலாளி
மத்த எல்லாரும் அறிவாளி
இதையாவது தோழா அறிவாய்நீ!!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-May-15, 10:18 pm)
பார்வை : 4212

மேலே