மே தினமே

மேதினி நாடுமே தினமே
மேன்மை நாடிட வருமே
மேதினி பாடுமே தினமே
நேரமே நாடு தினமே
பூதல மான ரதமே
தொழிலி னாலே யெழுமே
நீதி நாடியே தருமே
ஓரணி யான தினமே
***********************
8 மணி நேரமே நாடு தினமே
அதனால் தான் எட்டெட்டு எழுத்துக்கு அடுத்து மே என வரும்படிபாடியுள்ளேன்
பூமி என்ற சக்கரம் தொழிலாளியால் தானே சுழல்கிறது
அதனால் தான் மே தினத்தினை நான்காரை சக்கரத்தில் பாடியுள்ளேன்
பாடும் முறை எண்ணிட்டுக் காட்டியுள்ளேன்

எழுதியவர் : சு.அய்யப்பன் (2-May-15, 11:36 am)
Tanglish : maay தினmaay
பார்வை : 66

மேலே