இருட்டை தேடுகின்றேன்
பகல் வெளிச்சத்தில்
மங்கிப்போகும் நிலவொளி நான்!
பிரகாசிக்க வேண்டுமென
தினமும் இருட்டை தேடுகின்றேன்!
மதிப்பெண்கள் கொடுத்து
குறை சொல்லி எனது
திறமையை குறைத்து மதிப்பவர்கள்
யாரும் இல்லை...
கைதட்டி சுதி கூட்ட
கூட்டமும் இல்லை...
சுற்றிச் சுழன்று ஆடுகிறேன்
சுதியுடன் கணீரென்று பாடுகிறேன்!
யாருமற்ற தனிமையில்தான்
எனது திறமைகளை வெளிக்கொணர்ந்து
அரங்கேற்றம் செய்கிறேன்!
எனக்கு நானே பார்வையாளராகிறேன்!
எனக்கு நானே பாராட்டும் விருதும்
கொடுத்துக் கொள்கிறேன்!
நட்சத்திரங்களை மங்கச்செய்து
தனியாட்சி செய்ய இந்த நிலவு
தினமும் இருட்டை தேடுகின்றேன்!