புதுக் கட்சித் தலைவரிடம் முறையீடு
அண்ணே நன் பெரிய கோடீஸ்வரன். கட்சி நிதிக்காகப் பத்துக் கோடி கொடுத்திருக்கேன். இந்தாங்க இந்த ரசீதைப் பாருங்க. நான் உங்க பரம ரசிகன் ஆன காலத்திலிருந்தே உங்க படம் ரிலீஸ் ஆகறபோது கொடங்கோடமா பாலத் தெருவிலே கொட்டி பாலாபிஷேகம் பண்ணியிருக்கேன். கரகாட்டம், காவடியாட்டம் , அலகு குத்தறது, தீ மிதிக்கறது மண்சோறு சாப்பிடறது அன்னதானம் வழங்க்றது அங்கப்பிரதட்சணம் செய்யறது உங்களுக்கு ஒடம்புக்குச் சரியில்லன்னா தாடி மீசை வளத்து ஹோமம் நடத்தறது , உங்க ஒடம்பு சரியானதும் மொட்டையடீச்சிக்கற்து இப்படி ஒவ்வொண்ணையும் நூறு மொற செஞ்சிருக்கேன் . எனக்கு ஒரு பதவியும் தரவில்லையே . ரொம்ப மனசு ஒடஞ்சு போயிட்டேனுங்க.
யோவ் மொதல்ல நீ உங்க வீட்டுக்குப் போய் நீ செய்த தியாகெத்துக்கெல்லாம் வீடியோ ஆதாராம் இருந்தாக் கொண்டு வா. உனக்குப் பொருளாளர் பதவி தர்றேன். இல்லன்னா இந்தப் பக்கமே வராதே. போ.