புதுக் கட்சியில் சேர அழைப்பு
அன்புள்ள தமிழ் மக்களே நான் சில ஆண்டுகள் வரை பிரபலமாய் இருந்த நடிகன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் ஊழலை ஒழிக்கப் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்குகிறேன்.
மாநில அளவில் பொறுப்பு வகிக்க விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரும் தலைக்கு 5 கோடியும், மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தல ஒரு கொடியும், பிற பதவிகளுக்கு பதவிக்கேற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை கட்சியின் வளர்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்க வேண்டும். நான் மிகச் சிறந்த பக்திமான் என்பதை அனைவரும் அறிவீர்கள். ஏனவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் கட்சியில் சேரும் தகுதி இல்லையென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு உறுப்பினரும் எத்தனை முறை காவடி எடுத்தார்கள், எத்தனை தடவை மண் சோறு சாப்பிட்டு அங்கப்பிரதட்சணம் செய்து ஹோமம் நடத்தி அலகு குத்தி தீ மிதித்து பாத யாத்திரை போனார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டே பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்