ஆச

கதிரவனோடு விளையாட ஆச
கார்மேகம் அதிலே தவழ்ந்திட ஆச
பறவைகளோடு பழகிட ஆச
மழைக்கு குட .!பிடிக்க ஆச
மலரின் உள்ளே வாழ்ந்திட ஆச
தரையின் மேலே மிதந்திட ஆச
நகத்தின் நுனியில் நடந்திட ஆச
மரத்தின் கிளை மேல் உறங்கிட ஆச
நிலவை கையில் பிடித்திட ஆச
காற்றுக்கு வேலி அமைத்திட ஆச
நதிக்கு வழி நா காட்டிட ஆச
விழிக்கு தண்ணீர் ஊட்டிட ஆச
மொழிக்கு பேச உதவிட ஆச
அலைக்கு ஓய்வு கொடுத்திட ஆச
இறந்திடும் முன்னே பிறந்திட ஆச
என் வலிகள் தீர
விதியை மாற்றி நான் எழுதிட ஆச