செடி தேவதைகள்

மலரை நைத்து
மருந்து படைத்தது
குறித்து செடிகள்
வருந்துவது இல்லை
மறுநாளும் சந்தோசமாகவே
மலரோடு சிரிக்கும்
செடி தேவதைகள்
மண்ணின் மைந்தனோ
அதை கொடும்
வாள் கொண்டு
உடைகிறான்
சிதைக்கிறான்
சுயநலம் கொண்டு

எழுதியவர் : விமலாதித்தன் ராஜா (2-May-15, 10:02 pm)
Tanglish : sedi theyvathaigal
பார்வை : 81

மேலே