வட்டத்து உத்திகளும் வட்டத்துத்திக்களும்

இவர்களின்
ஆய்வுக்கூடங்களில்
எங்கள் ஊர் மூலிகைகளே
அதிகம் மணக்கின்றன..

ஆய்வும் விருத்தியும்
என்ற வட்டத்துள்
அதிகமான பங்களிப்பில்
இவைகளும்
கணிசமாய் ......

கறுவா கராம்பு
முதல்
காட்டாமணக்கு
வரை
கதை கேட்டால் கூறும்..

பக்டீரியாக்கள்
உருவத்தை
மாற்றிக் கொண்டதால்
ஏமாற்றப் படுகின்றன
பென்சிலின்கள்

சளிக்காய்ச்சலுக்கு
நிவாரணம்...
சந்தையில் பணம்..
யாரை யார் வெல்வதென
ஓடிக்கொண்டிருக்கின்றன
மருந்துக் கம்பனிகள்

------------------------------------

அடைகாக்க வைக்கப் பட்ட
ஏகார் தட்டு
அவதானமாக
கையாளப் படுகிறது ..

ஏகார் தட்டில்
செழித்திருந்த
சமுதாயத்தை
கொன்று கூறு
போட்டிருக்கிறது
பிரித்தெடுக்கப்பட்ட
இந்த வேதியல் கூறு

"அபிடுலோன் இண்டிகாம்"
அழகாக உச்சரிக்கிறது
அந்த ஆங்கில உதடு....
இவர்களுக்காக இனி
இந்தச் செடிகளும்
பொதிகளில் தயாராக...

மூலப் பொருட்களை
அள்ளிக் கொடுத்து
முடிவுப் பொருட்களை
காசு கொடுத்து வாங்கும்
முட்டள்களாய் ...

எங்கோ ஊரில்
வயல் ஓரமாய்
முளைத்து
கவனிப்பாரற்று
காடாய்க் கிடக்கும்
வட்டத்துத்திகள்
சிரித்துக் கொண்டே
இருக்கின்றன
ஏளனமாக...

எழுதியவர் : உமை (2-May-15, 6:07 pm)
பார்வை : 179

மேலே