பணம் படைத்தவனே
மாட மாளிகையின்
ஜன்னலை அலங்கரிக்கும்
திரை சீலையை கொடுத்துவிடு
ஏழை சிறுவனின் மானம்
மறைத்திட
பணம் படைத்தவனே ...!
நீ தின்ன பழம் இருக்க
உன் வீட்டு தோட்டத்தில்
அணில் தின்ன பழம்
சிறிதேனும் கொடுத்துவிடு
ஏழை சிறுவன் பசியாறிட
பணம் படைத்தவனே ...!
மழை ,குளிர், வெயில்
தெரியா உன் வீடு அருகே
சிறு கூடாரம் அமைத்து
கொடுத்துவிடு நிம்மதியாய்
உறங்கிட
பணம் படைத்தவனே ...!
மனம் படைத்தவனாய்
மாறிவிடு அதுவே
வாழ்க்கையின் சந்தோசம் !