அச்சச்சோ கடுங்கோபமொன்று வெட்கமானது எப்போது

உனக்கான காத்திருப்பில்
சில நிமிடங்களும்
சிரமமாய் தெரிய
எப்போதும் கடைசி அழைப்பில்
காத்திருக்கும்
உனை அழைத்ததில்
இரண்டு ரிங்கும்
ஏகமாய் இம்சிக்க

"எங்க இருக்க?"
"கண்டிப்பா சொல்லனுமா?"
"ம்ம்ம்ம்"
(கடுஙாகோபம் ம்ம்ம்ம்ல் தெரிந்திருக்குமோ)
"திரும்பி பாரு"

சட்டென திரும்பியதில்
ஆடையுரசி
நீ நிற்க
சிவந்த முகமொன்று
உன் கருவிழியில் தெரிந்தது

அச்சச்சோ கடுங்கோபமொன்று வெட்கமானது இப்போது :-)

எழுதியவர் : Mahalakshmi (4-May-15, 4:51 pm)
பார்வை : 134

மேலே