மழலை குறள்-

................................................................................................................................................................................................

1. புல்லட்ப்ரூப்பும் பூனைப்படையும் காப்பல்ல, அச்சன் கை
சுண்டுவிரல் காப்பே காப்பு.


2. ஏசி இனிது கர்லான் இனிது என்பர் தம் மம்மீஸை
ஈஷி மடி தூங்கா தவர்.

3. வீட்டுக்குள் பப்பிஷேம் ஓகே எனில், ரோட்டுக்குள்
ஸ்பெஷல் ஷேமும் தீது.

( ஸ்பெஷல் ஷேம்- துப்பட்டா இல்லாமல் சுரிதார் அணிவது, கிழிந்த ஆடை அணிவது)


4. அச்சு போல் காத்திருப்பார் பஸ் வருங்கால் அரை நிமிடம்
உச்சா போக விடார்.

5. ஐஸ் க்ரீமும் சாக்லெட்டும் கிடைத்தாயின் எம் வாழ்க்கை
அழுகையும் அடமும் அது.

6. பேசா திருப்பது ‘பேச்சுக்காய் ’ அல்ல சாக்லெட்டை
தாரா திருப்பது என் றறி.

7. தின்னுக வெள்ளை சாக்பீஸை, கலர் சாக்பீஸ்
கண்ணிரண்டை குத்தி விடும்.

8. கண்ட நாளெல்லாம் நாளல்ல, ஹோம்வொர்க் இல்லா
சண்டேதான் நாளென்(று) உணர்.


9. பயந்தாரிக்குள் பயந்தாரி அப்பாதான் தாயின்றி
தனியே தூங்கா தவர்.


10. மொத்தும் முத்தமும் ஒன்றாய்ப் பெற பெற்றோர்
யுத்தத்தில் இடையே நுழை.


12. "ஈஸ்வரா, உன்பேரென்ன’’ என்கின்ற அங்கிள்கள்
பாஸாக இருப்பது புதிர்.
( Boss)


13. அக்காவை மடக்க அங்கிள் தரும் கிப்ஃட் ஐட்டம்
பாப்பாவுக்கும் போகுமாம் பரிந்து.


14. செப்பு விளையாட்டில் செருப்பும் மொபைலாகும், தீப்
பெட்டியும் டிவியாய்க் காண்.


15. எப்போதும் அவனைப் பார் என்கின்ற பெற்றோர்
எப்போது பார்ப்பர் நானாக எனை ?


16. ஆளில்லா அமேசான் அடர் காட்டில் அகப்படல்
ப்ளே ஸ்கூல் போவதற்கு நிகர்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (5-May-15, 3:41 pm)
பார்வை : 219

மேலே