இணைய தமிழே இனி

கல் தோன்றி , மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய
மூத்த தமிழே ..! என் இனிய தமிழே ..!
இணைய தமிழே ! நீ வாழி !

நின் புகழ் பாடிய கவி பேரரசர்கள் ,
எத்தனை எத்தனையோ ...
நான் அந்த பரந்த சமுத்திரத்தில் ஒரு நீர் குமிழி ..

உலகம் உய்யும்வரை உன் புகழ்
என்றும் நிலைத்திருக்கும் இது திண்ணம் ...
என் இனிய தமிழ் மொழியே !
இன்று நீ என் இணைய தமிழானாய் ..

எத்தனை புதுமைகள் இவ்வையகத்தில் வரினும் ,
உன் பழம்பெருமை மாறாது ..
என் இனிய இணைய தமிழே !
மனதில் தோன்றியதை மாறாமல் , உடனே
அள்ளி தர நம் விஞ்ஞானம் நமக்கு
கொடுத்த கொடை..!

ஓலையும் எழுத்தாணியும் இன்றி ,
காகிதமும் , எழுது கோளுமின்றி ,
அச்சடிக்கும் இயந்திரமும் , மையுமின்றி
என்னவொரு அதிசயம் நிகழுது இங்கே ..

இணைய தமிழ் , எங்கள் இணையில்லா ,
இனிய தமிழ் ! இனி ,
எத்தனை முன்னேற்றம் வரினும்
எங்கள் இணைய தமிழின் பெருமை வருமா?

சிந்தனைக்கும் இணையத்திற்கும் போட்டி
என்றால் , யார் வேகமானவர் ?
இணையமே காத்து கிடக்கிறது ,
சில சமயம் சிந்தனையும் சிக்கி தான் தவிக்கிறது ...
இணைய தமிழே இனி ...
இவ் வையகத்தில் செவ்வனே
செய்திடும் தம் பணி...!

என் இனிய இணைய தமிழே ! நீ
என்றும் இம் மண்ணில் வாழி ...!

சாருமதி

எழுதியவர் : சாருமதி (5-May-15, 4:58 pm)
பார்வை : 69

மேலே