முரண்களின் முகவரி-ரகு
முரண்களின் வேர்களில் தான்
நெடிதுயர்கிறது தேடல்கள்
கொஞ்சம் அதிகப்படியானது தான்
காயங்களும்
வரலாறுகள் கூட
முரண்களை முன்னிறுத்தியே
தன் பயணகாலத்தை
நிர்ணயித்துக் கொள்கிறது
நிலையான
முரண்கள் அரிதாகி விடுவதற்கு
வழிகளில்
பூக்களோடு பொரியையும்
தூவுகின்றன
போராட்டக் களங்கள்
தனிச்சையான செயல் முடிவுகள்
சிறகசைவதற்கும்
உற்றவர்களுள் மெலிதாக
ஊடுருவும்
முரண்களின் பயனே !
தன் நிலை மாற்றங்கள் குறித்து
ஆய்ந்தறியும்
பக்குவ காலங்களுக்கு
நாட்காட்டிகளாகின்றன முரண்கள்
மனிதர்காள்
முரண்களின் முகவரி யாது?
உலக யுத்த வலிகளை
(சு)வாசித்தறியுங்கள்
சற்று முன் மேவிய முரண்
என்னைக் கவிதைக்குள்
முடுக்குகிறது உக்கிரத்தோடு !