போதும் போதுமே

உயிராக நீ ..உணர்வாக நான்
வாழ்கின்ற காலம் சுகம் தானடி
இரவு பகல் மறந்தேனடி
இனிமை அதில் கண்டேனடி..

மலை நீயடி ..
உனைத் தழுவும் மேகம் நானடி
குளிராகியே .. மழை பொழியவே
நிலம் யாவுமே.. குளிர்ந்து விடுமே !

என்னுயிரே..காதல் தீ.. நீ அணைக்க..
புதுக் காவியம் தான் நாம் படைக்க
மீண்டும் வந்து நான் பிறப்பேன்..
உனை மட்டுமே சேர்ந்திருப்பேன் !

மனம் தொட்டதா..உடல் பட்டதா
எனது நெஞ்சில் ... பூப் பூத்ததா..
கரை சேர்ந்ததா..நிலை கொண்டதா
காதல் புயல் வந்து ... என்னை
கலங்கடித்ததா..?

அடியே..அச்சம் என்று வெளியேறுமோ?
என் ஆசை என்று அரங்கேறுமோ?

தாங்கிக் கொள்ள ... நீயிருக்க
சாய்ந்து கொள்ளும் ..வேளையிலே
வேறு இடம் ..வேறு மனம்..
தேவையில்லையே ...தேவதையே!

இரவு வருமா..நிலவு வருமா..
எனக்கு அமைதி தருமா..
உறவு வருமா..வாழ்வு தருமா..
என் கலக்கம் தீருமா?
..
நித்தம் வெந்து நான் மயங்க
பேரின்பம் நீ வழங்க ..
உந்தன் துனையொன்றெ..
போதும் போதுமே!

எழுதியவர் : (6-May-15, 2:40 pm)
பார்வை : 85

மேலே