மழை காலம்

அது ஒரு அடைமழை காலம், மழை பொழிந்து கொண்டிருந்தது ,
பூங்கொடி தனது குடிசை வாசலில் 'காகித கப்பலை ' விட்டு கொண்டிருந்தால்
எதிர் வீட்டு சுந்தர் பூங்கொடி விளையாடுவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
அவனுக்கும் ஆசை பூங்கொடி போல விளையாடவேண்டும் என்று ,
உள்ளே இருந்து அம்மா , டேய் வெளியே செல்லாதே, மலையில் நலைந்தால்
காய்ச்சல் வந்துவிடும் கதவை மூடிவிட்டு உள்ளேவா என்றாள்,
பூங்கொடியின் காகித கப்பல் அனைத்தும் மூழ்கிவிட்டன, அவளது அம்மா 'ஏண்டி இந்த பேப்பர்
பழைய விலைக்கு போடிருந்தால் நாளை ஒரு வேலை பாலுககவது ஆகி இருக்குமே என்றாள்
பூங்கொடி அப்போது தான் நினைத்தாள் நாமும் சுந்தரை போல பெரிய வீட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று .........ஆனால் சுந்தரோ , நானும் பூங்கொடி வீட்டில் பிறந்திருந்தால் இன்பமாக இருக்கலாம் என்று நினைத்தான்.
மழை யால் வெள்ளம் அதிகரித்தது ..... அம்மாவின் பேச்சை மீறி வெளியவந்த சுந்தர் வெள்ளத்தில் மாட்டிகொண்டான், நீச்சல் தெரியாத அவனை பூங்கொடியின் தாய் காப்ற்றினால்
காலம் மாறியது இருவரும் ஒன்றாக விளையாடினார்கள் ...
குழந்தைகள் தங்களை எல்லா பருவ காலத்திற்கேற்ப தங்களை வளர்த்துகொள்ள வேண்டும் , பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்கவேண்டும் .........

எழுதியவர் : (6-May-15, 5:02 pm)
சேர்த்தது : மனிமுருகன்
Tanglish : mazhai kaalam
பார்வை : 276

மேலே