காவியமானவள்-பகுதி3

வீட்டை அடைந்த தமிழினியும் அன்னையும் இன்ப அதிர்ச்சியில் திகைத்தனர்...
தமிழினியின் அப்பா இறந்த பின் உறவுகள் யாவும் கை உதறிவிட உற்றார் உறவினர் யார் உதவியும் இன்றி ஆறு வயதே எட்டியிருந்த மகளை அழைத்து கொண்டு தஞ்சையில் இருந்து நாமக்கல்லிற்க்கு புழம்பெயர்ந்தாள் தமிழரசி அன்றிருந்து இன்றளவும் யாரும் நலம் விசாரிக்கக் கூட வந்ததில்லை அப்படி இருக்க தனது மகளின் சாதனை அறிந்து மெச்சி வாழ்த்த வந்தனர் தாய்மாமம்,அத்தை சின்னம்மாள்,சித்தப்பா என குடும்ப சகீதமாக அனைவரையும் கண்டு வரவேற்ப்பதா இல்லை வந்த பாதையிலேயை திருப்பி அனுப்புவதா என தமிழரசி முழித்துக்கொண்டிருக்க... தமிழினி வாங்க யார பாக்கனும் என்றாள் வாயடைத்து நின்றனர் வந்தவர்கள் அனைவரும்... இவர்கள்தானம்மா உன் சின்னம்மா,சித்தப்பா என அம்மா அறிமுகப்படுத்த மௌனித்தாள் தழினியும்...
வா செந்தாமரை வாங்க பாலா என அனைவரையும் உள் அழைத்தாள் தமிழரிசி... விருந்தாளியை உபசரிப்பது தமிழ் மரபாயிற்றே...
அனைவரும் இதுவரை எந்த வித தொடர்பிலும் இல்லாததற்க்கு வருத்தம் தெரிவித்து உள் நுளைந்தனர்...
நீங்க பேசிக்கொண்டிருங்க காஃபி போட்டு எடுத்துவருகிறேன் என சமையற்கட்டு நுளைந்தாள் தமிழினி...
என்ன இருந்தாலும் சகோதரப்பாசமாயிற்றே எப்படி வெறுக்க முடியும்...
விலாசம் அறிந்து வந்தது எப்படி ??
யார் நாங்கள் இங்கு வசிப்பதாக சொல்லியது என வினவ...
தமிழினியின் ஆசிரியை நமது ஊர் தான் அவர்கள் சொல்லி தான் தெரியும் என பதிலளித்தவாறு இருக்க தமிழினி காஃபி ஏந்தி வந்து எடுத்துக்கொள்ளச் சொன்னாள் அனைவரும் எடுத்து சுவைத்து பாராட்டினர் தமிழினியை...
வா மருமகளே உன் அம்மாவிற்க்கு பெரிய பேரை எடுத்து கொடுத்திருக்க ரொம்ப சந்தோசம் என மாமன் வாழ்த்த யாரோ ஏதோ பேசுவது போல் நின்றுகொண்டிருந்தாள் தமிழினி...
சற்று நேர அங்களாய்ப்பிற்க்கு பின் அனைவரும் விடைபெற்று கிளம்ப வாயிற்கதவு வந்தனர்...
அந்நேரம் எதிர்ப்பட்டான் ஆனந்த் வா ஆனந்தென தமிழினி வரவேற்றாள்...
யார் இது தமிழினி என சிண்ணம்மாள் கேட்க நண்பன் சிண்ணம்மா என பதிலளித்தவாறு வீதி எல்லை வரை கூட்டி சென்று விடைகொடுத்து திரும்பினாள் தமிழினி...
ஆனந்த் வீட்டின் வாசற்படியிலேயே காத்துக்கொண்டிருந்தான் தமிழினி மெல்ல மௌனமாக வெளியில் நின்று கொண்டிருந்த ஆனந்தை கூட கவணிக்காமல் உள் நிளைய முற்ப்பட்டாள்...
என்ன தமிழ் நான் நிற்ப்பதை கூட கவனிக்காமல் வீட்டுக்குள்ள போற என்னாச்சு உனக்கு என கடிய ஓ!.சாரி ஆனந்த் ஏதோ நினப்புல இருந்தேன் கவணிக்கல வா உள்ள போலாம் நான் வரமாட்டனா ஏன் வெளியவே நிக்கற உள்ள போய் அம்மா கூட பேசிட்டு இருக்க வேண்டிதான...
பரவால தமிழினி யார் அவங்க இதுநாள் வரை உங்க வீட்டுக்கு யாரும் இப்படி வந்ததில்லையே கூட்டமா வந்துட்டு போறாங்க என கேட்க வருத்தம் தோய்ந்த குரலில் மாமா,அத்தை,சித்தப்பா,சிண்ணம்மாவாம் ஆனந்த் நானும் இதுவரை இவர்கள பாத்ததுகூட இல்ல என்றாள்...
என்ன சொந்தக்காரங்க தமிழினி நண்பர்கள் கூட இன்பம்,துன்பம் என அனைத்திலும் பகிர்ந்து கொள்ள
உறவினர்கள் இப்படி இருக்கிறார்களே சரி இதுக்குலாம் நீ கவலைப்படாத நாங்க இருக்கோம் உங்களுக்கு...
என ஆறுதல்படுத்தினான் ஆனந்த்...
ரொம்ப நன்றி ஆனந்த் அம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல என்றாள்,
அப்பறமா வரேனு சொன்னாங்க தமிழ்...
நான் கேட்டது என்னாச்சு
சாரி ஆனந்த் அவங்களாம் வந்ததால செய்ய முடியல அரை மணி நேரம் காத்திரு செஞ்சு தரேன் என அமரச்சொன்னாள் தமிழினி...
சரி தமிழினி அம்மா எங்க கானோம்?..
பாசக்கார பயடா நீ என
குரல் கொடுத்து குழியளரையிலிருந்து வெளியயேறினாள் தமிழரசி...
ஆன்டி ரொம்ப பிசி போல விருந்தாளிகலெல்லாம் வந்திருக்காங்க பயங்கர உபசரிப்பா?என கேளி கலந்த புன்சிரிப்புடன் கிண்டலடித்தவனை அட
ஏம்பா,உடன் பிறந்தவர்களா இவர்கள் இதுவரை இல்லாத சொந்தம் இப்ப எப்படி கண்ணுக்கு தெரியுது ஏதோ வந்துட்டாங்களேனு காஃபி கொடுத்து நலன் விசாரித்து அனுப்பி வைத்தோம் ஆனந்த் என விரக்தியை வெளிப்படுத்தினாள் தமிழினி அன்னை...
சாரி ஆண்டி உங்க மனசு புன்படும்படி பேசிட்டேன் என மண்ணிப்பு கேட்டான் ஆனாந்த்...
பாருங்கம்மா பேசுனதயும் பேசிட்டு மண்ணிப்பு கேக்றான் என்று தமிழினி சமையற்கட்டிலிருந்து குரல் கொடுக்க அம்மா தாயே உன்னோடு மள்ளுக்கட்ட எனக்கு தெம்பு இல்ல நீ இன்னும் ஒருமணி நேரம் பண்ணுவ போல கேசரிய...சொன்ன மாதிரி உப்பு கிப்பு கலந்து கொடுத்தறாதம்மா என எதிர்குரல் எழுப்பினான் ஆனந்த்...
ச்சச...
அப்டிலாம் பண்ணுவனா டா...
இதோ தயார் வா என சமைலறைக்கு அழைத்தாள்
தமிழினி...
ஆன்டி வாங்க நீங்களும் உங்க மக செஞ்சத நீங்க சாப்ட்டு பார்த்து ரிசல்ட் சொல்லுங்க அப்றம் நான் சாப்டறேன் என கிண்டல் குறையாமல் வேகமாக அறைக்கு சென்றான் ஆனந்த்...
என்ன தமிழ் இன்னும் அடுப்ல இருந்தே இரக்கலயா ம்ம் சீக்கிரம் கலர பார்க்கும் போதே சாப்டனும் போல இருக்கு என அவசரப்பட
இருடா,கொஞ்சம் பொரு என்றவாறு துனி இல்லாமலே அவன் அவசரத்தை புரிந்து கொண்டு சூடான பாத்திரத்தை இரக்க முற்ப்பட்டு சூடு பட்டு ஆ!
என தமிழினி அலறிட பயந்து விட்டான் ஆனந்த்...
என்ன ஆச்சு டீ ஏன் இப்டி
கத்தற என தமிழினி அன்னை ஓடி வர செய்வதிறாது நின்றான் ஆனந்த்...
ஏண்டி என்ன ஆச்சு?
மறுபடி விசாரித்தாள் தமிழரசி...
சுட்டுகிட்டேன்மா என விரலை வாயில் வைத்தபடி உஸ்ஆஆஆ என முனவியவாறு கன்களை பல முறை சிமிட்டச் செய்தாள்...
ஆனந்த் அட "த்த்தூ"அவ்வளவுதானா நான் ஏதோ கீழ தேள் கொட்டிருச்சோனு தரைல துலாவிகிட்டிருக்கேன் எந்திருச்சு பார்த்தா விரல சூப்பிட்டு நிக்ற...
வா கேசரி சாப்டு சரயாகிடுமென கிண்டலடித்து ஆண்டி நீங்க எடுத்து வைங்க என அன்பு கட்டளை இட்டான் ஆனந்த்...
பாருங்க அம்மா நான் வலிக்குதுங்கரேன் இவன் கேசரி மேல தான் கண்ணா இருக்கான் என கம்ப்ளைண்டு செய்தாள் தமிழ்...
தண்ணீல விரல வைடி சரியாகிடும் என்றவாறு கேசரியை ஆனந்திற்க்கு பகிர,
எடுத்து வாய்க்கு கொண்டு செல்ல முற்பட்டான் ஆனந்த் அந்நேரம் எத்தனித்து பிடுங்கி உண்டாள் தமிழினி...
பாருங்க ஆன்டி குழந்தை விளையாடுது...
ஆமா ஆனந்த் அவ குழந்தைதான என தமிழரசி சொல்ல...
ஓகோ !!அப்படியா என
பேசியவாறு கேசரியை ருசித்த ஆனந்து புருவம் உயர்த்தினான்,
ஆகா என்ன சுவை ஆன்டி உங்க மகளை கட்டிக்க போரவன் கொடுத்து வெச்சவன் என பாராட்ட...
சத்தியமா அவன் நீ இல்லடா
என தமிழினி உரைத்தாள்...
யார் சொல்ல என்ன நடக்கப்போவுது கடவுள் நீங்க ரெண்டு பேரும்தான் தம்பதிகளென முடிவு பண்ணிருந்தா முடிச்ச வேற்றான் போட முடியுமா?
என எந்த ஒரு சகிப்பும் இன்றி பதிலுரைத்தாள் தமிழினியின் அன்னை...
இப்படியாக பொழுது கழிந்தது...
சரி ஆன்டி வருகிறேன் என்றவாறு எழுந்தான் ஆனந்த்,
சரிப்பா
போய்ட்டு வா நாளைக்கு பார்க்கலாம் என தமிழரசி சொல்ல, தமிழினி கை அழும்புவது போல வாசற்கதவு அருகில் சென்றாள்...
ஆனந்த் வெளியேற முற்ப்பட்டான்...
வழி அனுப்பியிருப்பாளா?
வலியை ஏற்ப்படுத்தியிருப்பாளா?
காத்திருங்கள்...
-காவியமாவாள்