சிரிச்சே உசுருல உறஞ்சவளுக்கு

ஓலப் பெட்டிக்குள்ள
சீனி மிட்டாய் போல
உள்ளுக்குள் அடங்கிட்டா-கூட்ட
சலம்பல் கேட்கல
தொல்லையும் இல்லயே
பேசுறன் கண்ணால
வெலகுது வெயிலும் தன்னாலே - இருந்தும்

சா்ருன்னு தான் உருகுறேன் நான்
சா்பத்து கட ஐஸ்ஸா
பொட்டுன்னு தான் உடையும் மனசு
பொட்டிக் கட சோடா..

இவ பேசுற ஓச கலந்தா
கருப்பட்டி வாசம் காத்தா..
உடம்பில் உள்ள செல்லுக்குள்ள
ஏழர கூட்டுறா..

அலையுற முடி எடுத்து
காதோரம் சேக்குறா
வளவி இசை கேட்டு
லோலாக்கு ஆடுதா?

கண்ணிமை துடிக்கயில
வருகிற சிறு காத்து
சூறாவளி எனக்காச்சு
பறக்குது என் உசுரு..

பரிட்சையில வாங்குன முட்ட
கண்ணுல தான் இருக்குது
ஆரெம்கேவில வாங்குன சட்ட
தாவணி பாத்து க்கெரங்குது

வியாக்யானமா பேசுவேன்-இப்போ
ஊமையாகி நடக்குறேன்
கேள்விக்குறியா புருவம் ஒசத்த
திக்கி முக்கி நிக்குறேன்..

புழுதித் தெருவ இவ
புதுசா மாத்துறா
கொங்கா பய மனச
சிரிச்சே கொய்யுறா.

கால் தடம் பதியலயே
கதறுது பூமியே
இவளோட செருப்பில் முட்டி
சண்டையிடும் மண்ணாலே.

வாரன்டா தான் இருக்கயில
அழகு எனக்கு முன்னால
சரன்டரு நான் ஆகுறேனே
தப்பு தண்டா செய்யாம..

அந்த முதலியாரு பாலம்-முழுக்க
யாரு பதிச்சா வயிரம்
இவ நடந்து வாரா- ஊரே
புது சொலிக்குற நகரம்...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (7-May-15, 12:46 am)
பார்வை : 158

மேலே