நம் சாயம் வெளுக்கிறதே

முன்பெல்லாம் கோவிலுக்கு செல்லும் போது

"கடவுளே ,எல்லாரையும் காப்பாத்து!
ஒழுங்கா படிக்கணும் ,
தம்பி பரிட்சையில பாஸ் ஆகணும்........ன்னு உறவுகளுக்காகவும் வேண்டிய காலம் மறைகிறதே .....!

நம் வீட்டிற்கு பெரியவர்கள் வரும்போது மரியாதையுடன் எழுந்து நின்று வரவேற்ற காலம் மறைகிறதே....!

முன் பின் தெரியாதவர்களை கூட அண்ணா ,அக்கா என உறவுமுறை வைத்து அழைத்த பாசமான பேச்சுக்கள் மறைகிறதே ......!

ஒத்த ஒத்த ரூபாயா சேர்த்து வைத்த காசுல,
நமக்கு பிடிச்ச பொருள் வாங்க கடைக்கு போகும்போது ,வழியில பட்டினி கிடக்குற பாட்டிக்கு கொஞ்சம் காசு கொடுத்த கைகள் மறைகிறதே .......!

நெடுந்தூரம் இருந்தாலும் கடிதங்கள் மூலமாகவும் ,
விடுமுறை நாள் பயனங்களாலும் பலப்பட்ட உறவுகள் ,
விரல் நுனியில் அலைபேசி இருந்தும் உறவுகளை அழைக்க மறுக்கிறதே ....!

இடி மழைகளிலும்,
கொளுத்தும் வெயில்களிலும் ,
கும் இருட்டிலும் ,
கண்ணை கட்டிவிட்டால் கூட கால்கள் தானாக நடக்க பழக்கபட்ட வீதிகளில் கூட

இன்று நடக்க பயமாய் இருக்கிறதே ....!

To be continued.....

எழுதியவர் : tkscribbles (7-May-15, 7:01 pm)
சேர்த்தது : யாளி
பார்வை : 130

மேலே