வெகுதூரமில்லை

தரணியாளும் தேவியவள்
பார்புகளும் பதுமையவள்
நம் பாரதத் தாயவள்
அவள் வெட்டியெறிந்த விரல்நகம்
வெள்ளிநிலவாய் ஜொலிக்குது
முத்துமாலைச் சிதறல்கள்
எண் திசை போகிறது
நட்சத்திரமாய் நகர்வலம்
புவனத்தின் தாயவள்
கொஞ்சி விளையாடும் நந்தவனம்
முக்கடல் கொண்டு முடிசூடிய மூத்தவள்
பேர்சொல்லும் பிள்ளைகள் பல
பெற்றெடுத்த தாயவள்
பச்சை வண்ணப் பட்டுடுத்த
பைங்கிளி கையிலேந்தி
மொழி மாலை சூடியவள்
விரல்கள் பத்தும் விந்தியமலை தொடங்கி
தொட்டபெட்டாவைத் தொட்டுச் செல்லும்
சூழ்ச்சியால் சுரண்டிய போதும்
அமுதசுரபி போல் அள்ளிக்கொடுத்தவள்
மதங்கள் பல இருந்தாலும்
மாதா நீ ஒருவள்தான்
பல்லரசு கண்டநாம்
வல்லரசாகும் நாள்
வெகுதூரம் இல்லை,

எழுதியவர் : தமிழ்நேசன் (யோகேஷ் பிரபு இ (7-May-15, 10:47 pm)
சேர்த்தது : யோகேஷ் பிரபு இரா
பார்வை : 396

மேலே