பிரம்மனும் பித்தன் தான்

ஆயகலைகள் அறுபத்துநான்கும்
உன் அழகிய அசைவுகள்
ஸப்த ஸ்வரங்களும்
உன் கொழுசுமணிகள்
கொஞ்சிப் பேசும் காதல் மொழி
மின்னல் உன் சிரிப்பு
அமிழ்தம் உன் உமிழ்நீர்
இடி உனது மௌனம்
கிரகணம் உன் உறக்கம்
தென்றல் உன் சுவாசம்
அமிலம் உன் கண்ணீர்
வீணை உன் விரல்கள்
பளிங்கு உன் பாதங்கள்
பிறைநிலா உன் புருவங்கள்
சூரியன் உன் சுடர்திலகம்
கார்முகில் உன் கண்ணிமைகள்
ரோஜா உன் பூவிதழ்
இத்துணை வைத்த பிரம்மன்
பித்தனாகி விட்டானோ
உன் நெஞ்சத்தை வைப்பதில்
கல்லாக்கி விட்டான் தஞ்சம் புகாமலிருக்க

எழுதியவர் : தமிழ்நேசன் (யோகேஷ் பிரபு இ (7-May-15, 10:41 pm)
சேர்த்தது : யோகேஷ் பிரபு இரா
பார்வை : 134

மேலே