அவள் ஒரு தேவதை
நெற்றியில் நடனம் பயிலும் ஒற்றைமுடி...
சிகப்பழகை சிறப்பழகாக்கிக் கொண்டிருக்கும் சிறிய குங்குமம்...
கயல் விழிகளை காந்த விழிகளாக்கிக் கொண்டிருக்கும் கண் மை...
மூக்கில் மோட்சம் அடைந்திருக்கும் மூக்குத்தி...
காதோரத்தில் கானம் பாடும் கம்மல்...
வானவில்லை வளைத்துக் கட்டியிருக்கும் வளையல்...
இணைப்பிரியா இமைகள் கூட விரதம் இருக்கின்றன
இவளை விழிகள் கண்டுக் கொண்டே இருக்க...!!!
இதயம் இரண்டும் பார்வையால் இணைந்தே இருக்க...!!!