படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - கவிதைத் தலைப்பு-இசை மீட்ட வருவாயா

பெண்ணே
தனிமரத்தின் கீழ்
அமர்ந்து உள்ளாய் 'தனிமரமாய்'
நீ ஒரு கனி மரமாய் இருந்தும் ..........
உன் கண்கள் உன்னவனை தேடுகின்றன!
அவன் மட்டும் அருகில் இருந்தால்,
உன் கரம் பற்றி
அந்த வயலினை மீட்டுஇருப்பான் .....
உன் சோகம் நீங்கி இருக்கும்.........
உன் வசதியான வாழ்வினை விட்டு
வெளியேறி விட்டாய் அவனுக்காக ,
கவலை கொள்ளாதே - உன் காதல்
அலை அவனை இழுத்து வந்துவிடும்!
அதோ
அங்கே 'கதிரவனின் ' ஒளி தெரிகிறது
உன் காதல் வெற்றிக்காக............
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்